ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஒத்திவைப்பு.. என்ன காரணம்..?!

இந்திய ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் விகிதமாக ரெப்போ வட்டி விகித நிர்ணயம் செய்யும் நிதி கொள்கைக் குழுவின் முக்கியமான இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நிர்வாகத் தேவைகள் காரணமாக ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதன் மூலம் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறிவிப்பார் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதுக்குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் நிர்வாகத் தேவைகள் காரணமாக, ஆகஸ்ட் 2-4, 2022 நடக்க வேண்டிய நாணய கொள்கை கூட்டம் ஆகஸ்ட் 3-5 தேதி ஒத்திவைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தியாவின் புதிய விண்வெளி நிலையம் ஏன்? ஆச்சரியமளிக்கும் தகவல்கள்!

நாணய கொள்கை கூட்டம்

நாணய கொள்கை கூட்டம்

இந்திய ரூபாய் மதிப்பு, வர்த்தகம், பொருளாதாரம், முதலீட்டு சந்தை என அனைத்தும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர் கொண்டு இருக்கும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள், பொருளாதாரச் சூழ்நிலையை ஆகியவற்றை ஆய்வு செய்து ரெப்போ விகிதம் மற்றும் இதர நிதிக் கொள்கைகளை மறுசீரமைப்புச் செய்வது மூலம் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் இருப்பதை உறுதி செய்கிறது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ரிசர்வ் வங்கி கடந்த முறை அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பாகவே ரெப்போ விகிதத்தை உயர்த்தும் காரணத்தால் பெரிய அளவிலான சரிவில் இருந்து தப்பியது. இந்த நிலையில் பணவீக்க உயர்வால் அமெரிக்கா தனது பென்ச்மார்க் வட்டியை உயர்த்த முடிவு செய்திருக்கும் நிலையில் ஆர்பிஐ முடிவு என்னவாக இருக்கும்..?’

ஐரோப்பிய மத்திய வங்கி
 

ஐரோப்பிய மத்திய வங்கி

ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 0.0 சதவீதமாக அறிவித்துள்ளது. குழப்பமாக உள்ளதா, இதுவரை ஐரோப்பிய மத்திய வங்கி மைனஸ்-ல் தனது வட்டி விகிதத்தை வைத்திருந்தது.

11 ஆண்டுகளுக்குப் பின்

11 ஆண்டுகளுக்குப் பின்

தற்போது 0.5 சதவீதம் உயர்த்தியதன் மூலம் 0.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் எவ்விதமான வட்டியை அதிகரிக்காத நிலையில் ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்பு ஐரோப்பிய மத்திய வங்கி பென்ச்மார்க் வட்டியை உயர்த்தியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் ஜூன் மாத பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, இது முந்தைய மாதத்தை ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும். ரிசர்வ் வங்கியின் 4-6 சதவீத வட்டி விகித இலக்கிற்கு மேல் உள்ளது. இந்தப் பணவீக்கத்தைக் குறைக்க ஆர்பிஐ கடந்த இரு அறிவிப்பில் 0.90 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடனுக்கான வட்டி விகிதம்

கடனுக்கான வட்டி விகிதம்

ஆர்பிஐ ஆகஸ்ட் 3-5 தேதி ஒத்திவைத்துள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால் கட்டாயம் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் போன்ற அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயர்வும். வட்டி விகிதம் அதிகமாக உயர்ந்தாலும் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்ல அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI postpones MPC meeting by a day to August 3 due to administrative exigencies

RBI postpones MPC meeting by a day to August 3 due to administrative exigencies ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஒத்திவைப்பு.. என்ன காரணம்..?!

Story first published: Friday, July 22, 2022, 14:55 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.