இந்திய ஜனாதிபதி தேர்தலில் முதல் பழங்குடியின பெண். திரவுபதி முர்மு  வெற்றி

இந்திய ஜனாதிபதி தேர்தலில் 64 சதவீத ஓட்டுகளை பெற்று பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு Droupadi Murmu  வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர் அந்நாட்டின் வரலாற்றில் முதல் பழங்குடியின பெண். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது வகிக்கின்றார். ராம்நாத் கோவிந்த்.14 ஆவது  ஜனாதிபதியான அவரது பதவிக்காலம் வருகிற ஆம் திகதியுடன்  நிறைவடைகிறது.
15வது குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 18ந்தேதி நடைபெற்றது. குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுமத்தில் 776 எம்.பிக்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றிருந்தனர்.  நாடாளுமன்ற வளாகம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற வளாகங்கள் என மொத்தம் 31 நிலையங்களில்  வாக்குப்பதிவு நடைபெந்நது. மொத்தம் உள்ள 4,809 வாக்குகளில் 4,754 வாக்குகள் பதிவாகின.
குடியரசு தலைவர் தேர்தலில் சுமார் 64 வீத வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். மொத்தம் பதிவான 4,754 வாக்குகளில் செல்லாத வாக்குகள் 53. மீதமுள்ள 4,701 வாக்குகளில் திரௌபதி முர்வுக்கு 2,824 வாக்குகள் கிடைத்தன. அந்த வாக்குகளின் மொத்த மதிப்பு  6,76,803 ஆகும். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா சுமார் 36 வீத வாக்குகளையே பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக   எதிர்வரும்  25 ஆம் திகதி  பதவியேற்கிறார். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2 ஆவது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார். மேலும் இந்தியா  விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். 3 ஆவது சுற்றிலேயே முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்கா தனது தோல்வியை ஒப்புக்கொண்டு முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 
 
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.  தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.Captur
 
பிரதமர் மோடி, முர்முவின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
ராகுல்காந்தி மத்திய மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரிகள் யோகி ஆதித்யநாத் (உ.பி.), மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரா), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட்) , தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.