உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சர் பதில்

வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் தங்கள் படிப்பைத் தொடர தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் இடமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், இந்தியா திரும்பியவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் முடிவுக்கு மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றார்.

மேலும், இந்திய மாணவர்கள் சீனாவில் தாங்கள் பயின்ற கல்லூரிகளுக்குத் திரும்ப அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக மத்திய அமைச்சர் முரளிதரன் மக்களவையில் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.