மும்பை : டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், ‘உடனடி தேவைகளுக்காக இலக்கை மாற்ற தயாராக இல்லை’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மேலும், முன்னேறிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ரூபாயின் மதிப்பு வலுவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80 ரூபாயை தொட்ட நிலையில், சக்திகாந்த தாஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது:டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ஏற்ற இறக்கத்தை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி தொடர்ந்து எடுத்து வருகிறது.மேலும், சந்தையில் போதுமான அளவுக்கு டாலர் கிடைப்பதற்கான சப்ளையையும் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. இதில் எந்த குறிப்பிட்ட வரம்புகளையும் ரிசர்வ் வங்கி
வைத்துக்கொள்ளவில்லை.உடனடி தேவைகளுக்காக, ரிசர்வ் வங்கி தன்னுடைய இலக்கை மாற்றி அமைக்க விரும்பவில்லை.பணவீக்கத்தை முன்னிட்டு, இரு முறை வட்டியை உயர்த்திய போதும், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய கால நிலையை விட குறைவாகவே உள்ளது.
விரைவில் ‘டிஜிட்டல்’ கடன் குறித்த வரைமுறைகள் கொண்டு வரப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement