உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், ஏழைகளுக்கு உதவுவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்குத் தனது முழுச் சொத்தையும் நன்கொடையாக அளித்துள்ளார்.
இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய். இவர் கடந்த 50 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!
உத்தரப் பிரதேச மாநிலம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கோயல், இப்பகுதியில் மக்களுக்குக் குறிப்பாக ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்து சிகிச்சைகளை அளித்து வரும் காரணத்தால் மிகவும் பிரபலமானவராக உள்ளார்.
50 ஆண்டு உழைப்பு
கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றும் அரவிந்த் கோயல் தனது சொத்துக்கள் அனைத்தையும் உத்தரப் பிரதேச மாநில அரசு பயன்படுத்திக்கொள்ளவும், உரிமை கொள்ளவும் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 600 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அழர் பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.
600 கோடி ரூபாய் சொத்து
தனது சொத்துகளை உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்ற முடிவை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே அரவிந்த் கோயல் மற்றும் அவருடையை மனைவியும் இணைந்து முடிவு செய்துள்ளதாக அரவிந்த் கோயல் கூறினார்.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றின் போது மொராதாபாத் சுற்றியுள்ள 50 கிராமங்களைத் தத்தெடுத்து மக்களுக்கு இலவச வசதிகளை அரவிந்த் கோயல் வழங்கியுள்ளார். அவர் மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
நான்கு குடியரசுத் தலைவர்கள்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி பாட்டீல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் உட்பட நான்கு முறை குடியரசுத் தலைவரால் டாக்டர் கோயல் கௌரவிக்கப்பட்டு உள்ளார்.
அரவிந்த் கோயல் குடும்பம்
அரவிந்த் கோயல் மற்றும் அவரது மனைவி ரேணு கோயல் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சொத்தின் உண்மையான விலையைக் கணக்கிட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
Uttar Pradesh doctor Arvind Goyal donates Rs 600 crore property to UP govt
Uttar Pradesh doctor Arvind Goyal donates Rs 600 crore property to UP govt உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்படியும் ஒருவர்.. 600 கோடி சொத்து..!