2022ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த இடங்கள் பட்டியலில் ஒரே ஒரு பிரெஞ்சு நகரத்துக்கு மட்டும் இடம்கிடைத்துள்ளது.
அந்த நகரம், Marseille நகரம்!
அமெரிக்க வாராந்திர பத்திரிகையான டைம் பத்திரிகை, 2022ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் பிரெஞ்சு நகரமான Marseilleக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது.
Marseille நகரத்தின் கலாச்சார சிறப்பு மிக்க இடங்கள், புதுமையும் தரமும் வாய்ந்த உணவு மற்றும் சமீபத்தில் கடலுக்கடியில் அமைக்கப்பட்ட Cosquer Méditerranée cave centre என்னும் சுற்றுலாத்தலம் ஆகியவை அந்நகரத்துக்கு இந்த சிறப்பைப் பெற்றுத்தந்துள்ளன.
2022ஆம் ஆண்டின் உலகின் தலைசிறந்த இடங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற ஒரே பிரெஞ்சு நகரம் Marseille என்பது குறிப்பிடத்தக்கது.
Pic: S-F / Shutterstock