ஐரோப்பாவின் குடுமி விளாடிமிர் புடின் கையில்.. குளிர்காலம் வேற வருது.. அச்சத்தில் மக்கள்..!

நோர்ட் ஸ்ட்ரீம் 1, ஐரோப்பாவின் முக்கிய எரிவாயு குழாய், ஐரோப்பா ஏற்கனவே எரிபொருள், எரிவாயு பற்றாக்குறையில் தத்தளிக்கும் நேரத்தில் பராமரிப்புக்காக 10 நாட்களுக்கு எரிவாயு நிறுத்த மூடப்பட்டது.

ஜூலை 11 முதல் 21 வரை நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் அமைப்பின் இரண்டு வழிகளையும் மூடப்பட்ட நிலையில் இன்று அதாவது ஜூலை 22 திறக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ரஷ்யா தற்போது வில்லங்கமாக ஒரு திட்டத்தைத் தீட்டியுள்ளது என எனர்ஜி துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். இது மட்டும் நடந்தால் ஐரோப்பா மொத்தமாக முடங்க வேண்டிய நிலை தான் வரும்.

ரெசிஷன் அச்சம் உச்சம்.. யாரெல்லாம் பயப்பட வேண்டும்..?! ஊழியர்களே உஷார்..!

நார்ட் ஸ்ட்ரீம் 1

நார்ட் ஸ்ட்ரீம் 1

நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 ஆகியவை பால்டிக் கடல் வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய்கள், இது ஐரோப்பிய நாடுகள் முழுவதும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும் முக்கியமான பைப்லைன். 10 நாள் பராமரிப்புப் பணிகளுக்குப் பின்பு நார்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைன் துவங்கினாலும் முழுமையாக இயங்க துவங்கவில்லை.

40 சதவீத கேபாசிட்டி

40 சதவீத கேபாசிட்டி

நார்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைன் தற்போது 40 சதவீத கேபாசிட்டி அளவில் தான் இயங்கி வருகிறது, அடுத்த சில நாட்களில் ரஷ்ய அரசு இதன் அளவீட்டை 20 சதவீதமாகக் குறைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாகவும் எனர்ஜி துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்யா ஏன் இதைச் செய்ய வேண்டும்.

ஐரோப்பா குளிர் காலம்
 

ஐரோப்பா குளிர் காலம்

ஐரோப்பாவில் குளிர் அல்லது பணிக்காலம் வரைவில் துவங்க உள்ள நிலையில் போதுமான எரிவாயுவை ஐரோப்பா சேமிக்கக் கூடாது என்பதற்காக, தன்னிடம் இருக்கும் அதிகமாக எரிவாயு-வை ஆயுதமாக ரஷ்யா ஐரோப்பா மீது பயன்படுத்தும் என எனர்ஜி துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா

ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் உடன் சேர்ந்து ஐரோப்பாவும் அதிகப்படியான வர்த்தகம், பொருளாதாரம், நிதியியல் தடைகளை விதித்தது. இந்நிலையில் ஐரோப்பா முழுவதும் ரஷ்யா-வின் எரிவாயு, எரிபொருளை நம்பியிருக்கும் வேளையில் ரஷ்யா இதை ஆயுதமாகப் பயன்படுத்து ஐரோப்பாவை அடக்குகிறது.

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

“விளாடிமிர் புடின் ஐரோப்பிய கண்டத்தை நிரந்தரப் பீதியில் வைத்திருக்க விரும்புகிறார்,” என ஆர்பிசி கேபிடல் மார்க்கெட்ஸில் உள்ள பொருட்களின் மூலோபாயத்தின் உலகளாவிய தலைவர் ஹெலிமா கிராஃப்ட் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் வாய்ப்பை உருவாக்க நினைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

அஜர்பைஜான்

அஜர்பைஜான்

இதேவேளையில் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை குறைக்கத் தீவிரமான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ஐரோப்பிய யூனியன், அஜர்பைஜான் நாட்டுடன் தனது எண்ணெய் வர்த்தகத்தை 2027க்குள் இரட்டிப்பாக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vladimir Putin wants Europe in ‘perpetual panic’; Russia restarts Nord Stream gas 40 percent flows

Vladimir Putin wants Europe in ‘perpetual panic’; Russia restarts Nord Stream gas 40 percen flows ஐரோப்பாவின் குடுமி விளாடிமிர் புடின் கையில்.. குளிர்காலம் வேற வருது.. அச்சத்தில் மக்கள்..!

Story first published: Friday, July 22, 2022, 16:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.