கள்ளக்குறிச்சி மாணவி கொலை செய்யப்பட்டாரா? ஸ்ரீமதி ஆவியுடன் பேசிய நபர்., வைரலாகும் வீடியோ


தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கள்ளக்குறிச்சி சம்பவத்தில், புதிதாக சர்ச்சையை கிளப்பும் வகையில் மாணவி ஸ்ரீமதியின் ஆவி வாக்குமூலம் கொடுப்பது போன்ற யூடியூப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. 

அமெரிக்காவில் சார்லி சிட்டென்டன் எனும் நபர் 91 ஆயிரத்திற்கும் அதிகமான சபஸ்கிரைபர்களுடன் Charlie Chittenden Paranormal எனும் யூடியூப் சேனலை நடத்திவருகிறார். அவர் தனது சேனலில் இறந்துபோனவர்களின் ஆவிகளை அழைத்து பேசுவதை விடியோவாக எடுத்து வெளியிட்டுவருகிறார். இதுபோல், உலகில் உயிரிழந்த பல பிரபலங்களின் ஆவியுடன் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் Shinzo Abe, நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் மனைவி இவானா டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா என பலரது ஆவிகளை வரவழைத்து பேசுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி கொலை செய்யப்பட்டாரா? ஸ்ரீமதி ஆவியுடன் பேசிய நபர்., வைரலாகும் வீடியோ | Kallakurichi Student Srimathi Death Youtube VideoScreenshot: Charlie Chittenden Paranormal/Youtube

இந்நிலையில், அவர் இரு திங்களுக்கு முன்பு, தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் ஆவியை அழைத்து பேசிய வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், ஸ்ரீமதி நீங்கள் எப்படி இருந்தீர்கள், உங்களை கொலை செய்தார்களா, யார் உங்கள் மரணத்திற்கு காரணம் என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒலிபெருக்கியில் இருந்து, “Its Murder”, “My Mother”, “Harm”, “Side”, “they Love It”, “Evil”, “a lie”, என்றெல்லாம் வெவ்வேறு விதமான இரைச்சலான குரல்களில் பதில்கள் வந்தன.

கள்ளக்குறிச்சி மாணவி கொலை செய்யப்பட்டாரா? ஸ்ரீமதி ஆவியுடன் பேசிய நபர்., வைரலாகும் வீடியோ | Kallakurichi Student Srimathi Death Youtube VideoScreenshot: Charlie Chittenden Paranormal/Youtube

இதனை வைத்து, சார்லி சிட்டென்டன் “ஸ்ரீமதி, அவர் கொலை செய்யப்பட்டதாக சொல்கிறார்” என்று கூறியுள்ளார். இரண்டு பாகமாக வெளியிடப்பட்ட இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

வீடியோக்களை காண: Part-1: https://www.youtube.com/watch?v=NhfPzjqOue8 & Part-2: https://www.youtube.com/watch?v=Ti8keDW1Eq8

வீடியோவின் கீழே கருத்துப்பெட்டியில், சிலர் இதனை நம்புவதை போன்றும், மூன்றாவது வீடியோவை கேட்டும் பதிலளித்துள்ளார்.

வீடியோக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.