புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் இன்று டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேகேதாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, ‘மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க கூடாது’ என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க கூடாது. அந்த திட்டம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று வெளியான காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிகழ்ச்சி நிரலில், “மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.