கூகுள்-க்கு போட்டியாக இண்ஸ்டாகிராம் புதிய சேவை.. மோனோபோலி உடைந்தது..!

டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் புதிய சேவைகளை அறிமுகம் செய்வதைக் காட்டிலும் ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை வெளியேறாமல் தக்க வைக்கத் தரமான மற்றும் புதிய சேவைகளை அளிப்பது மிகவும் முக்கியமாக உள்ளது.

இந்த வேளையில் சமுகவலைதளப் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மெட்டா குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான இண்ஸ்டாகிராம் சேவையில் புதிதாக அதுவும் கூகுள் நிறுவனம் மோனோபோலியாக இருக்கும் ஒரு சேவையை மார்க் ஜூக்கர்பெர்க் அறிமுகம் செய்துள்ளார்.

இதனால் கூகுள் நீண்ட காலமாகக் கட்டியாண்ட ஒரு வர்த்தகப் பிரிவில் புதிய போட்டி உருவாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இப்படியொரு டாக்டர்.. 600 கோடி சொத்து நன்கொடை..!

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இண்ஸ்டாகிராம் தனது தளத்தில் புதிதாகச் சர்சபிள் மற்றும் டைனமிக் மேப் சேவை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய சேவை மூலம் போட்டோ மற்றும் ஷாட் வீடியோ தளமாக இண்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் இனி லெகேஷன் மற்றும் இடங்களை டேக் செய்து பதிவிட முடியும்.

இண்ஸ்டாகிராம்

இண்ஸ்டாகிராம்

இந்தப் புதிய சேவை மூலம் இண்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் ஒரு பகுதியில் இருக்கும் கஃபே, சலூன், ரெஸ்டாரென்ட், தியேட்டர், போன்ற பல முக்கியமான இடங்களைப் பட்டியலிட்டுப் பார்க்க முடியும். இது புதிய வர்த்தகத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் இண்ஸ்டா வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள்.

கூகுள் இன்டர்நெல் டேட்டா
 

கூகுள் இன்டர்நெல் டேட்டா

கடந்த வாரம் கூகுள் இன்டர்நெல் டேட்டா தரவுகள் படி ஜெனரேஷன் Z பிரிவில் இருக்கும் 40 சதவீத இண்டர்நெட் வாடிக்கையாளர்கள், ஒரு விஷயத்தைத் தேடவும், மேப்-ஐ செக் செய்யவும் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தாமல் டிக்டாக் மற்றும் இண்ஸ்டாகிராம் செயலிகளைப் பயன்படுத்துவதாகக் கூகுள் உயர் துணைத் தலைவரான பிரபாகர் ராகவன் கூறினார்.

மோனோபோலி

மோனோபோலி

மேப்ஸ் பிரிவில் இதுவரை கூகுல் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் மார்க் ஜூக்கர்பெர்க்-ன் இந்த முயற்சி அறிவிப்பு மெட்டா மற்றும் கூகுள் மத்தியில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. கூகுள் மேப்ஸ் மூலம் இப்பிரிவில் மோனோபோலியாக இருக்கும் வேளையில், மெட்டா அதை உடைந்துள்ளது. அடுத்தச் சில வருடத்தில் கூகுள் மேப்ஸ்-க்கு இணையாக இண்ஸ்டா மேப்ஸ் உயருமா..?

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள்

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள்

இதேவேலையில் கூகுள் மேப்ஸ்-ல் எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான பிரத்தியேகமாக வழிகாட்டும் அம்சத்தை உருவாக்கி வருகிறது. எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் கார்கள் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில், அதேவேளையில் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்ட வழித்தடத்தைக் காட்ட இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்குப் புதிய சேவை அளிக்க உள்ளது.

டோல் கட்டணம்

டோல் கட்டணம்

இந்தியாவில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது மேப்ஸ் செயலியில் புதிதாக ஒரு சேவையை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய சேவையில் வெளி மாநிலங்கள் அல்லது வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் போது இருக்கும் டோல்களில் செலுத்த வேண்டிய கட்டணத்தை முன்கூட்டியே கணக்கிட்டு மக்களுக்குக் கூகுள் மேப்ஸ் வாயிலாக அளிக்கும் சேவையைக் கொண்டு வந்துள்ளது கூகுள் மேப்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Instagram rolls out new map feature; Is Meta Breaking Google maps monopoly

Instagram rolls out new map feature; Is Meta Breaking Google maps monopoly கூகுள்-க்கு போட்டியாக இண்ஸ்டாகிராம் புதிய சேவை.. மோனோபோலி உடைந்தது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.