2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவுசெய்தது. அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
முதல் அமர்வில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர். அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம்.
பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம்.