முருங்கை இலையில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கிறது. குறிப்பாக இது ஆண்களுக்கு மிகவும் நன்மை தருகிறது. ஆண்களை தாக்கும் ப்ராஸ்டேட் நோய்க்கு இது மருந்தாக செயல்படுகிறது. முருங்கை இலையில் காணப்படும் சில சத்துக்கள் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் நோய்யை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
மேலும் இதில் இருக்கும் பாலிபினால்ஸ், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் விலங்களிடத்தில்தான் இந்த ஆய்வுகள் நடத்தப்படிருந்தாலும் மனிதர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எலிகளிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அதன் விந்தனு உத்பத்தியை முருங்கை இலை சாறு அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களின் விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சாப்பட்டில் உள்ள கொழுப்பு, பெண்களைவிட ஆண்களுக்குத்தான் வயிற்றுப் பகுதியில் தங்கிவிடுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பியின் செயல்பாட்டை தடுக்கிறது.
இந்நிலையில் 4 கிராம் முருங்கை இலை பொடி இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. இந்நிலையில் சுகர் நோயாளிகளிடத்தில் நடந்த ஆய்வில். சாப்பாட்டுடன் முருங்கை இலைப் பொடி 20 கிராம் சேர்த்து சாப்பிடும்போது, சக்கரை நோயாளிகளுக்கு உணவுக்குபின் உயரும் சர்க்கை அளவு அதிகரிக்கவில்லை.