சென்னை மெட்ரோ ரயிலில் கலாச்சார, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்: எங்கே, எப்போது?

சி.எம்.ஆர்.எல்., சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்த முடிவுசெய்துள்ளது. இந்த வார இறுதியில் நிகழ்ச்சிகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு நடக்கவிருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஜூலை 23-ம் தேதி உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் டிப்போ மெட்ரோ வரையிலான ரயிலில் மற்றொரு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம், நான்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன – ஆகஸ்ட் 6 ஆம் தேதி கிண்டி மெட்ரோ, ஆகஸ்ட் 13 ஆம் தேதி திருமங்கலம் மெட்ரோ, ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆலந்தூர் மற்றும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விமான நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோவிற்கு ஒரு மெட்ரோ ரயிலில் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

தற்போது, ​​CMRL தனது சேவைகளைப் பயன்படுத்தி தினசரி சராசரியாக 1.8 லட்சம் பயணிகளின் வருகைக்  கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பதின் நோக்கம், அதிகபட்ச பயணிகளைப் பெறுவதே என சி.எம்.ஆர்.எல். கூறியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.