ஜப்பான் நிறுவனம் Toshiba கொண்டுவந்துள்ள புதிய 4K QLED ஸ்மார்ட் டிவிக்கள்!

Toshiba Android Smart TV: ஜப்பான் மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான தோஷிபா, இந்தியாவில் 4K UHD கூகுள் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் M550, C350 ஆகிய இரு வகைகள் அடங்கும்.

இந்த தொகுப்பு ஸ்மார்ட் டிவிக்கள் ஜூலை 22ஆம் தேதியான இன்று முதல் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய ஷாப்பிங் தளங்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – பெரிய சிக்கலில் இருந்து பெண்ணை காத்த ஆப்பிள் வாட்ச்

தோஷிபா M550 மற்றும் C350 ஸ்மார்ட் டிவி விலை (Toshiba M550 and C350 series Price in India)
இதில் C350 தொடர் 43 இன்ச், 55 இன்ச் ஆகிய இரு அளவுகளில் கிடைக்கிறது. இதனை அமேசான் தளத்திலிருந்து ரூ.29,990 என்ற தொடக்க விலையில் வாங்கலாம். அறிமுகம் சலுகையுடன் இந்த ஸ்மார்ட் டிவி ஜூலை 23 முதல் 2 வருட கூடுதல் உத்தரவாதத்துடன் அமேசானில் கிடைக்கும்.

மேம்பட்ட M550 தொடர் ஸ்மார்ட் டிவிக்கள் 55 இன்ச், 65 இன்ச் ஆகிய இரு அளவுகளில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் இருந்து இந்த ஸ்மார்ட் டிவிக்களை ரூ.54,990 முதல் வாங்கலாம். கூடுதலாக 50C350 என்ற மாடலில் விலை ரூ.34,990 சலுகை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவிக்கள் இன்று முதல் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.

தோஷிபா M550 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Toshiba M550 Smart TV Features)

புதிய தோஷிபா டிவி தொடரின் M550 பிளாக்ஷிப் சீரிஸ் ஆனது Google TV, Quantum dot, Full Array Local Dimming, 2.1 Bazooka Woofer, Far Field Voice Control, Regza Engine 4K Pro AI Picture Optimizer, டால்பி விஷன் HDR மற்றும் Game Mode போன்ற அம்சங்களுடன் நிரம்பியுள்ளது.

இந்த தொடர் பில்ட் இன் 2.1 சேனலுடன் Bazooka Woofer உடன் வருகிறது. இந்த பிரத்யேக 20 வாட்ஸ் சப்-வூஃபர் டிவியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இணைந்து மொத்தமாக 40W வாட்ஸ் சக்திவாய்ந்த ஒலித்திறனை வெளிப்படுத்துகிறது.

Nothing Phone 1 Sale: ரூ.32,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.1,567க்கு வாங்க அருமையான வாய்ப்பு!

தோஷிபா C350 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Toshiba C350 Smart TV Features)

தோஷிபா C350 4K கூகுள் டிவி சீரிஸ் கூகுள் டிவி, ரெக்ஸா எஞ்சின், டால்பி விஷன், டால்பி அட்மோஸ், கேம் மோட், பெசல்-லெஸ் டிசைன் போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது.

இரண்டு புதிய டிவி தொகுப்புகளும் சமீபத்திய கூகுள் இயங்குதளம், கூகுள் உள்ளடக்கங்களுடன் வருகிறது. இதில் Chromecast-க்கான முழு ஆதரவு, Apple Home Kit, Apple Air Play ஆகியவற்றுக்கான ஆதரவும் கிடைக்கும். இந்த டிவியில் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), விர்ச்சுவல் ரெப்ரெஷ் ரேட் (VRR) கொண்ட கேம் பயன்முறையும் உள்ளது.

Prime Day 2022 Tips: என்ன வாங்குனாலும் சரி; இத கொஞ்சம் பாத்துட்டு போங்க!

தோஷிபா M550 ஃபார் ஃபீல்ட் வாய்ஸ் கன்ட்ரோலைக் (Far Field Voice Control) கொண்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் குரலால் டிவியைக் கட்டுப்படுத்தவும், ஒலியளவை மாற்றவும் மற்றும் அவர்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தைப் பார்க்கவும் உதவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.