ஜூன் காலாண்டில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி எப்படி.. யார் அதிக லாபம்!

ஜூன் காலாண்டில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி எப்படியுள்ளது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் பணவீக்கம், ரெசசன் அச்சத்தின் மத்தியில் எப்படி செயல்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ இன்று அதன் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் வரிக்கு பின்பு 20.94% குறைந்து, 2563.6 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 3242.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெங்களூரினை தலைமையிடமாகக் கொண்ட இந்த ஐடி நிறுவனத்தின் நிகர லாபம் 3087 கோடி ரூபாயில் இருந்து, 16.96% குறைந்துள்ளது.

ஆபீஸ், வீடு, வாகனம் எல்லாமே சோலார்.. அசத்தும் ஊழியர்.. மாதம் ரூ.18,000 மிச்சம்.. எப்படி?

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

விப்ரோ நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.8% குறைந்தும், கடந்த ஆண்டினை காட்டிலும் 8.1% குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதே இந்த ஐடி நிறுவனத்தின் வருவாய் விகிதம் 19% அதிகரித்து, 21,529 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 18,252.4 கோடி ரூபாயாக இருந்தது.

டாலரில் என்ன நிலை?

டாலரில் என்ன நிலை?

இதே டாலரின் மதிப்பில் ஐடி நிறுவனத்தின் வருவாய் விகிதம் 13.3% அதிகரித்து, 1.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதே இந்த ஐடி நிறுவனத்தின் செயல்பாட்டு மார்ஜின் விகிதமானது 15% ஆக உள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 200 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.

பங்கு சரிவு
 

பங்கு சரிவு

இந்த காலாண்டர் ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் பங்கானது நடப்பு காலாண்டில் இதுவரையில் மட்டும் 43% சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்த காலகட்டத்தில் நிஃப்டி 50 மற்றும் பி எஸ் இ சென்செக்ஸ் முறையே 8% சரிவினைக் கண்டுள்ளன.

டிசிஎஸ் நிலவரம்

டிசிஎஸ் நிலவரம்

மற்ற நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ள போதிலும் நாட்டின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 5% அதிகரித்து, 9478 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது எதிர்பார்ப்பினை காட்டிலும் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் 16.2% அதிகரித்து, 52,758 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹெச்சிஎல் நிலவரம்?

ஹெச்சிஎல் நிலவரம்?

கடந்த வாரத்தில் ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் நிகரலாபம் 8.6% குறைந்து, 3283 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதம் 4% வளர்ச்சி கண்டு, 23,464 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. லாபம் குறைந்திருந்தாலும் நிறுவனம் வரவிருக்கும் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என்றும் தெரிவித்துள்ளது.

லாபத்தில் சரிவு

லாபத்தில் சரிவு

இந்த பட்டியலில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபம் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவானது ஜூலை 24 அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மேற்கண்ட நிறுவனங்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் டிசிஎஸ் மட்டுமே லாப அதிகரிப்பினை கண்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் லாபம் கண்டிருந்தாலும், குறைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How are India’s leading IT companies growing in June quarter?

How are India’s leading IT companies growing in June quarter?/ஜூன் காலாண்டில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி எப்படி.. யார் அதிக லாபம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.