திடீரென வேறு இடத்துக்குத் திருப்பி விடப்பட்ட விமானம்: பயணிகளை திகிலடையவைத்த காரணம்


ஸ்பெயினுக்குச் சொந்தமான தீவு ஒன்றிலிருந்து அயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானி வெளியிட்ட அறிவிப்பு மக்களை பதற்றப்படவைத்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஸ்பெயினுக்குச் சொந்தமான Lanzarote என்ற தீவிலிருந்து Aer Lingus நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று அயர்லாந்து நோக்கி பறந்துகொண்டிருந்திருக்கிறது.

அந்த விமானம் டப்ளின் விமான நிலையத்தில் சென்று தரையிறங்கவேண்டிய நிலையில், திடீரென விமானி, ஷான்னான் விமான நிலையத்தில் விமானம் இறங்க இருப்பதாக அறிவிக்க, அவசரமாக மக்கள் வெளியேறவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் விமான ஊழியர்கள் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

திடீரென வேறு இடத்துக்குத் திருப்பி விடப்பட்ட விமானம்: பயணிகளை திகிலடையவைத்த காரணம் | Abruptly Diverted Flight

Credit: PA:Press Association

பயணிகள் என்ன நடந்தது என்பது தெரியாமல் பதற, எதனால் விமானம் தரையிறக்கப்படுகிறது என்பது தெரிந்ததும் அவர்கள் மேலும் திகிலடைந்தார்கள். ஆம், விமானத்தில் போதுமான எரிபொருள் இல்லாததால், அந்த விமானம் டப்ளிப்னுக்குச் செல்வதற்கு பதிலாக ஷான்னானுக்கு சென்றிருக்கிறது.

விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆயிற்று என பதற, இரண்டு மணி நேரம் தாமதமாக டப்ளின் வந்தடைந்துள்ளது அந்த விமானம்.

விமான நிறுவனம், ஏற்பட்ட தாமதத்துக்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.