தினசரி ரூ.50 முதலீடு.. முதிர்வின்போது ரூ.35 லட்சம்.. அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்!

அஞ்சலக திட்டங்கள் என்றாலே மிக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக இருப்பதால், முதலீட்டுக்கு ஏற்ற திட்டங்களாக உள்ளது. முதலீட்டு திட்டங்கள் மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் திட்டங்களும் மக்களுக்கு ஏற்ற திட்டங்களாக உள்ளன.

அந்த வகையில் இன்று அஞ்சலகத்தின் இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

இதில் யார் யாரெல்லாம் இணைக்கலாம்? எவ்வளவு முதலீடு செய்யலாம்? எவ்வளவு வருமானம் கிடைக்கும்? எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது போன்ற முமையான விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஆகாசா ஏர்லைன்ஸ் முதல் விமானம் பறக்கும் தேதி அறிவிப்பு: முன்பதிவு எப்போது?

கிராம சுரக்ஷா திட்டம்

கிராம சுரக்ஷா திட்டம்

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டம அரசு ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், நகர்புற ஊழியர்கள், கிராமப்புற ஊழியர்களுக்கும் பயனளிக்க கூடிய விதத்தில் வழங்கப்படுகிறது. இது பி எல் ஐ மற்றும் ஆர்பிஎல்ஐ என இரு திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள்

அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI) அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் என பல தரப்பினரும் இணைந்து பயன் பெறலாம்.

இதில் இரண்டாவது திட்டமான ஆர்பிஎல்ஐ கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் இந்த பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம்.

கூடுதல் பாதுகாப்பு
 

கூடுதல் பாதுகாப்பு

இன்சூரன்ஸ் என்றாலே பொதுவாக எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து, குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கும் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆக இப்படி பாதுகாப்பு கொடுக்கும் திட்டங்கள் அரசு சார்ந்த அமைப்பு வழங்கும் திட்டம் என்றால் இன்னும் கூடுதல் பாதுகாப்பு தானே.

எவ்வளவு காப்பீடு?

எவ்வளவு காப்பீடு?

அஞ்சலகத்தின் இந்த கிராம சுரக்ஷா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதிலானவர்களுக்கு காப்பீட்டினை வழங்குகிறது. இதில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000 ரூபாயாகும். அதிகபட்ச காப்பீடு என்பது 10 லட்சம் ரூபாயாகும்.

என்னென்ன சிறப்பம்சங்கள்

என்னென்ன சிறப்பம்சங்கள்

இந்த திட்டத்தில் 4 வருடத்திற்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பாலிசியினை மூன்று வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். இந்த பாலிசியினை 5 வருடத்திற்கு முன்பு சரண்டர் செய்தால், போனஸ் கிடையாது. இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்த 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள் வசதிகள் உண்டு. இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு.

பிரிமீயம் எவ்வளவு?

பிரிமீயம் எவ்வளவு?

தனி நபர் ஒருவர் 19 வயதில் 10 லட்சம் ரூபாய்க்கான தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான பிரிமீயம் 1515 ரூபாயாகும்.

இதே 58 வருடம் எனில் 1463 ரூபாய் பிரிமீயமாக இருக்கும்.

அதுவே 60 வயதில் 1141 ரூபாயாகவும் இருக்கும்.

ரூ.34 லட்சம் எப்படி?

ரூ.34 லட்சம் எப்படி?

55 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.

இதே 58 ஆண்டு திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.

60 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக முதிர்வு தொகையாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

post office insurance scheme offers Rs35 lakh at maturity if you invest Rs.50 daily

post office insurance scheme offers Rs35 lakh at maturity if you invest Rs.50 daily/தினசரி ரூ.50 முதலீடு.. முதிர்வின்போது ரூ.35 லட்சம்.. அஞ்சலகத்தின் அசத்தல் திட்டம்!

Story first published: Friday, July 22, 2022, 15:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.