வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான் இன்று மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்தாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் பாடகர் சித்து மூசே வாலா கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டம் தீட்டினோம் என்றார்.
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா என்ற பகுதியில்பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், அவரது தந்தை சலீம் கான் ஆகியோர் வசிக்கின்றனர். கடந்த மாதம் சலீம் கான் தன் உதவியாளருடன் நடைபயிற்சி சென்ற போது எதிரில் வந்த ஒருவர் உதவியாளரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு மின்னல்வேகத்தில் சென்று விட்டார் .அந்தக் கடிதத்தை பிரித்துப் படித்த சலீம் கான் அதிர்ச்சி அடைந்தார்.அதில் சலீம் கான் ,சல்மான் கான் ஆகிய இருவரையும் கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த நடிகர் சல்மான் கான், சட்டம் ,ஒழுங்கு கமிஷனர் விவேக் பன்சால்கரை சந்தித்து பேசினார். 15 நிமிடத்திற்கு மேல் நடந்த இந்த சந்திப்பிற்கு பின் அலுவலகத்தை வெளியேறி வேகமாக காரில் ஏறி சென்றார். இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், தனக்கும் தனது குடும்பத்திற்கும் தனிப்பட்டமுறையில் தற்காப்புக்காக தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் வேண்டி மனு செய்தாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement