நம்மளை விட அவங்க ரொம்ப மோசம்.. ரூபாய் மதிப்பு குறித்து ஆனந்த் நாகேஸ்வரன்

கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் என சரிந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த் நாகேஸ்வரன் அவர்கள் இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்ற நாடுகளின் கரன்சிகளின் சரிவை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.

வரலாற்று சரிவில் ரூபாயின் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் இருக்கம் தான் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பாவின் யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் ஆகிய கரன்ஸிகளின் சரிவை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மிகவும் குறைவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மூலதனம்

வெளிநாட்டு மூலதனம்

அமெரிக்க மத்திய வங்கியின் பண இறுக்கம் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு வளர்ந்துவரும் நாடுகளில் இருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறி வருகிறது. இதனால் உள்நாட்டு நாணயங்கள் சரிவை சந்திக்கின்றன என்று ஆனந்த் நாகேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 சரிவு கட்டுப்படுத்தப்படும்
 

சரிவு கட்டுப்படுத்தப்படும்

இந்திய ரூபாயின் சரிவை விட ஜப்பானிய யென், ஐரோப்பாவின் யூரோ, சுவிஸ் நாட்டின் பிராங்க், பிரிட்டிஷ் பவுண்ட் ஆகியவை மிக மோசமாக சரிந்துள்ளது என்றும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை இந்தியாவில் இருந்து டாலர்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு நிதி வருவாயை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்றும் இதனால் உள்நாட்டு நாணயத்தின் சரிவு கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கம் இறக்குமதி வரி

தங்கம் இறக்குமதி வரி

இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய தாராளமய மாற்றப்பட்ட விதிகளை அறிவித்துள்ளது என்றும் குறிப்பாக தங்கம் இறக்குமதி மீதான இறக்குமதி வரியை அரசு குறைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றபின் ரூபாய் மதிப்பு 25 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என கூறியுள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு என்பது ஒருவிதத்தில் நல்லது என்றும், ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஏற்றுமதியில் போட்டி அதிகமாகியுள்ளது என்றும், இது பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

இந்திய ரிசர்வ் வங்கி, நிறுவனங்களுக்கான வெளிநாட்டு கடன் வரம்புகளை உயர்த்தியது மற்றும் அந்நியச் செலாவணி வரவை அதிகரிக்க பல நடவடிக்கைகளை அறிவித்ததால் இந்திய பொருளாதாரம் சாதகமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அரசு பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கான தாராளமயமாக்கப்பட்ட விதிமுறைகள் பொருளாதாரத்தை மேலும் வலுவாக்கும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய ரூபாய் மதிப்பு

இன்றைய ரூபாய் மதிப்பு

இந்த நிலையில் சற்றுமுன் கரன்சி வர்த்தகம் தொடங்கிய நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80.0325 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee drop against dollar lower than other key currencies: CEA V Anantha Nageswaran

CEA V Anantha Nageswaran says Rupee drop against dollar lower than other key currencies

Story first published: Thursday, July 21, 2022, 12:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.