வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுக்கி வைத்துள்ள ரூ. 250 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி 2019 மார்ச்சில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடி ஹாங்காங்கில், போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டிபாசிட் என ரூ. 253.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
இதனை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement