சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற சேனல்களை காட்டிலும் விஜய் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிர்கள் பட்டாளம் ஏராளம்.
அந்த வகையில் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. தொடக்கத்தில் ஓரளவு வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மறுபுறம் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பு குறைந்து காணப்படும் பாரதி கண்ணம்மா சீரியல் சலிப்பை ஏற்படுத்தி வந்தது.
மேலும் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி சீரியல்களுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் பலத்த வீழ்ச்சிதான் கிடைத்தது. இதனை சரிகட்டும் வகையில் தற்போது ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இரண்டையும் ஒன்றாக இணைத்து மீண்டும் ஒரு மகா சங்கமம் எபிசோடு தொடங்கியுள்ளது.
மற்ற மகா சங்கம எபிசோடுகள் போன்று இதுவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கோவில் நகைகளை சிவகாமி எடுத்தாக சாமியார் சொல்ல அதை இல்லை என்று நிரூபிக்க அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே இந்த நகைகள் அனைத்தும் அர்ச்சனா கையில் கிடைக்க அவர் வரட்டியில் அதனை ஒளித்து வைத்துவிட்டார்.
ஆனால் வீட்டில் கேஸ் தீர்ந்துபோனதால் வரட்டியை வைத்து சந்தியா அடுப்பு எரிக்கும்போது அதில் இருந்து நகைகள் கிடைக்கிறது. இதை பார்த்து அனைவரும் ஷாக் ஆக அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில், சீரியல் பரபரப்பான திருப்பங்களை நோக்கி செல்வதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“