மாணவி ஸ்ரீமதியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு மறுபிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவு இன்னும் வெளியாகாத நிலையில் அதன் அறிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் அவரின் உடலை பெற்றோர் இன்னும் பெற்று கொள்ளவில்லை.
இதையடுத்து நாளைக்குள் ஸ்ரீமதி உடலை பெற்று கொள்ள வேண்டும் என அவர் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் எப்போது உடலை பெற்று கொள்வோம் என்பதை மாணவி தரப்பில் இன்று 12 மணிக்கு சொல்வோம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் உயர்நீதிமன்றம் தெரிவிக்கையில், மாணவியின் இறுதி சடங்கை நடத்துங்கள், அந்த ஆத்மா இளைப்பாறாட்டும்.
உடலை பெற வேண்டும், இல்லையென்றால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.