சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முருகப்பா குரூப் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் இருக்கும் வாய்ப்புகளைக் கைப்பற்ற 3 சக்கர வாகனங்களைத் தனது Montra பிராண்டின் கீழ் அறிமுகம் செய்ய 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புத் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புத் துறையில் அதிகம் கவனம் செலுத்தும் டாடா குழுமத்தின் பாதையில் தற்போது முருகப்பா குரூப்-ம் பயணம் செய்யத் துவங்கியுள்ளது.
கிரிப்டோவில் இன்சைடர் டிரேடிங்கா.. அமெரிக்காவில் 2 இந்தியர்கள் மீது குற்றம்..?
முருகப்பா குழுமம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா குழுமத்தின் கிளை நிறுவனமான Tube Investments of India (TII) எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் இறங்குவதற்காக Moshine Electronics Private Limited (MEPL) நிறுவனத்தில் 76 சதவீத ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
மோஷைன் எலக்ட்ரானிக்ஸ்
மோஷைன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் போன்களுக்கான கேமரா மாடியூல்களை உற்பத்தி செய்கிறது, MEPL நொய்டாவில் அதன் உற்பத்தி தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் சுமார் 8.64 கோடி மதிப்பிலான பங்குகளை இரண்டாம் நிலை கொள்முதல் மூலம் டியூப் இன்வெஸ்ட்மென்ட் கையகப்படுத்த உள்ளது.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (TII) சமீபத்தில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதில் நீண்ட கால வணிக வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ப பல்வகை முதலீடுகளைச் செய்துள்ளது. இதேபோல் அதன் வளர்ச்சியைத் தக்கவைக்கப் புதிய வணிக மற்றும் வருவாய் வழிகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொள்கைகள்
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (TII) எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களைத் துறையில் இருக்கும் வளர்ச்சியை அடையாளம் கண்டுள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இத்துறையில் அறிவித்த PLI திட்டம் மற்றும் இதர முக்கியமான கொள்கை மாற்றங்கள் ஆகியவை இத்துறை வளர்ச்சியைப் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது.
ஐபிஎல் டெக் எலக்ட்ரிக்
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா இந்த வாரம் மட்டும் அறிவிக்கும் இரண்டாவது கையகப்படுத்தல் இதுவாகும். இந்த வார தொடக்கத்தில், டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா (TII) மின்சாரக் கனரக வர்த்தக வாகன நிறுவனமான ஐபிஎல் டெக் எலக்ட்ரிக் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான டிஐ கிளீன் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் மூலம் சுமார் 65% பங்குகளைச் சுமார் 246 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தது.
எம்.ஏ.எம். அருணாசலம்
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (TII) தலைவர் எம்.ஏ.எம். அருணாசலம் மோஷைன் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நாங்கள் கையகப்படுத்தியதன் மூலம், எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் எகோசிஸ்டம் பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
Chennai Based Murugappa group acquires 76% equity stake in Moshine Electronics
Chennai Based Murugappa group acquires 76% equity stake in Moshine Electronics முருகப்பா குரூப்-ன் அடுத்த அதிரடி.. டாடா-வை பின்பற்றுகிறதா..?