கொரோனா தொற்று காலத்தினை முன்னிட்டு அச்சமயத்தில் ரயில்வே நிர்வாகம் அனைத்து விதமான ரயில் கட்டண சலுகை களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு அனைத்து ரயில் சேவைகளும் மீண்டும் வழக்கம் போல் இயங்கின. ஆனால் பழைய கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை.
இதனால் மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கட்டண சலுகையை மீண்டும் துவங்கும் முடிவு இல்லை என அரசு அறிவித்தது.இந்நிலையில் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் ” ₹911 கோடிக்கு விளம்பரச் செலவுகள், ₹8,400 கோடிக்கு புதிய விமானம், ஆண்டிற்கு ₹1,45,000 கோடி முதலாளியின் நண்பர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அரசிடம் முதியோர்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்க ₹1,500 கோடி இல்லையா ” என ராகுல் காந்தி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.