பங்கு சந்தை முதலீட்டில் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒரு பங்கினை வாங்கி வைக்கிறார் என்றாலே, அது கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாக உள்ளது.
அந்த வகையில் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் உள்ள 5 பங்குகளை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்த பங்குகள் 1 மாதத்தில் 23% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
19 ஆண்டுகால பயணத்தை முடித்துக் கொண்ட பிரசாந்த் ஜெயின்.. ஏன் ராஜினாமா?
ஃபெடரல் வங்கி
ஃபெடரல் வங்கியானது 52 வார உச்சத்தினை ஏப்ரல் 2022ல் எட்டியது. எனினும் அடுத்த மாதமே 25% என்ற அளவுக்கு சரிவினையும் கண்டது. எனினும் ஃபெடரல் வங்கியானது அதன் காலாண்டு முடிவினை வெளியிட்ட பிறகு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. சமீபத்தில் அதன் 52 வார உச்சமான 109.45 ரூபாயினை எட்டியது. கடந்த ஒரு மாதத்தில் 89 ரூபாயில் இருந்து 107.50 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 23% வரையில் அதிகரித்துள்ளது.
எஸ்கார்ட்ஸ் குபோட்டா
எஸ்கார்ட்ஸ் குபோட்டா ஆட்டோ பங்கானது ஏப்ரல் – ஜூன் 2022ல் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பங்கினை வாங்கியுள்ளார். கடந்த மாதத்தில் இந்த பங்கின் விலையானது 147% அதிகரித்துள்ளது. இதன் வருவாயானது வலுவான வளர்ச்சியினை கண்ட நிலையில், அதன் வளர்ச்சியானது அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வாரத்தில், அக்டோபர் 2021 முதல் பதினைந்து நாட்கள் ஏற்றத்தில் இருந்தது. அக்டோபர் 21ன் இராண்டாவது 15 நாட்களில் இருந்து மீண்டும் பிளாட் ஆக வர்த்தகமாகத் தொடங்கியது. அதன் பிறகு பிப்ரவரி 2022 வரையில் பெரியளவில் மாற்றமின்று ஒரு ரேஞ்ச் பவுண்டில் இருந்தது. கடந்த மார்ச் முதல் ஜூன் நடுப்பகுதி வரையில் கடந்த 1 மாதத்தில் 15.50% ஆக உயர்ந்துள்ளது.
ஸ்டார் ஹெல்த்
சமீபத்தில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கானது பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. எனினும் கடந்த ஒரு மாதத்தில் 12 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கிலும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம் கணிசமான பங்கினை வைத்துள்ளார்.
டைட்டன் நிறுவனம்
டாடா குழுமத்தினை சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 2021 அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து மார்ச் 2022 இறுதி வரை பக்கவாட்டில் இருந்தன. இது மார்ச் 2022ல் கடைசி வாரத்தில் இருந்து சரி செய்யத் தொடங்கி ஜூன் 2022 இறுதி வரை சரிவை சந்தித்தது. இருப்பினும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்கு ஏற்றத்தில் உள்ளது. ஜூலை 2022ல் அறிமுகமான பிறகு அதன் பிறகு , அதன் பங்குதாரர்களுக்கு 12.50% வருவாயினை வழங்குகிறது.
Rakesh jhunjhunwala portfolio: These 5 stocks rise up to 23% in 1 month: do you have any?
Rakesh jhunjhunwala portfolio: These 5 stocks may rise up to 23% in 1 month/ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோ..5 பங்குகளும் 1 மாதத்தில் 23% வரையில் ஏற்றம்..!