திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட வாசனை வருவது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் மற்றும் மனலி பகுதியில் எரிவாயு கசிவு வாசனை வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த குழுவில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த இரண்டு விண்வெளி ஆய்வாளர்கள் இருகின்றனர். டாக்டர் கோகுல் மற்றும் டாக்டர் சிவதானு பிள்ளை மற்றும் மத்திய மாசுகட்டுப்பட்டு வாரியத்தின் மாநில இயக்குநர் டாக்டர் எச்பி வரலட்சுமி. ஐஐடி மெட்ரால் ஆசிரியர் எஸ் எம் சிவ நாகேந்திரா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசியர் என். பாலசுப்பிரமணியன் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு ஜூலை 23ம் தேதிக்கும் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்படுள்ளது.