பந்தலூர் : நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், பன்றிகளுக்கு ” ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்” பரவி வருகிறது.
நீலகிரி மாவட்ட எல்லையான பந்தலூர் அருகே கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், மானந்தவாடி பகுதியில் பன்றி பண்ணையில், ஒரே நாளில் 5 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதன் இறைச்சி பாகங்கள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. முடிவில் பன்றிகளுக்கு ” ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்” பாதிப்பு ஏற்ப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. வயநாட்டிலிருந்து தமிழக எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் உள்ள பன்றி இறைச்சி கடைகளுக்கு பன்றிகள் கொண்டு வரப்படும் நிலையில்,தமிழக பகுதியில் உள்ள பன்றிகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.
தமிழக கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி கூறுகையில்,இது டி.என்ஏ. வைரஸ் நோயாகும். பாதிப்பு ஏற்ப்பட்ட பன்றிகளுக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டு நடுக்கம் உண்டாகும். பசி எடுக்காது. உடல்கள் நீல நிறத்திற்கு மாறி, காதுகள், வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்படும். இந்த காய்ச்சல் 1920 ல் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது என்றார். கோவை மண்டல கால்நடை உதவி இயக்குநர் பகவத்சிங் கூறுகையில், தமிழகத்தில் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. நீலகிரி எல்லை பகுதியில் உள்ள பன்றி வளர்ப்பு கூடங்களில் ஆய்வு மேற்க்கொள்ளப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement