புதுடெல்லி: பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு நுழைவுச் சீட்டு (போர்டிங்பாஸ்) பெறுவது அவசியம். தற்போது விமானப் பயணச் சீட்டைமுன்பதிவு செய்தபிறகு, பயணிகள்தாங்களாகவே ஆன்லைனிலே நுழைவுச் சீட்டையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்லைன் மூலம் நுழைவுச் சீட்டு பெறாதவர்கள் விமான நிலையத்தில் உள்ள செக்-இன் கவுன்டருக்குச் சென்று நுழைவுச் சீட்டு பெற வேண்டும்.
இண்டிகோ உட்பட சில விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு செக்-இன் கவுன்டரில் வைத்து நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால், விதிப்படி நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய விமானத் துறை அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சில விமான நிறுவனங்கள் நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு கட்டணம் வசூலிப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. விதிப்படி, நுழைவுச் சீட்டு வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.