புகைப் பிடிப்போரின் வயதை 21 ஆக உயர்த்தக்கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் சுபம் அஸ்வதி மற்றும் ரிஷி மிஸ்ரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் கல்வி நிலையங்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், புகைபிடிப்போரின் வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே கெளல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உங்களுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது என்றால் நல்ல மனுவை தாக்கல் செய்து நன்றாக வாதிடுங்கள்; இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யாதீர்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM