வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ‘சுதந்திர தின அமுதப் பெருவிழா’ (அசாதி கா அம்ரித் மோட்சாவ்) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, ‛ஹர் கர் ட்ரையாங்கா’ இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வரலாற்றின் சில குறிப்புகளை பகிர்ந்த பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடியையும் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா(ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement