வேற லெவல் திட்டம் போடும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம்… உலகளாவிய சந்தைக்கு இலக்கு!

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய விலை உயர்வு மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் ஆகியவை காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு வருவது உற்பத்தியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி ஆலையை வைத்திருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது உற்பத்தி ஆலைக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

விமான பயணிகளுக்கு இனி பணம் மிச்சம்… சிவில் போக்குவரத்து துறையின் முக்கிய உத்தரவு!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சலுகைகள் -மானியம்

சலுகைகள் -மானியம்

எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள், மானியம் போன்றவற்றையும் அரசு அறிவித்து வருகிறது. பொதுமக்களும் மாறி வரும் பருவ காலம், காற்று மாசு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை பெருமளவு வாங்கி வருகின்றனர்.

ஹீரோ எலக்ட்ரிக் வாகன நிறுவனம்
 

ஹீரோ எலக்ட்ரிக் வாகன நிறுவனம்

இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே ஒரு உற்பத்தி ஆலையை இயக்கி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இரண்டாவது உற்பத்தி ஆலை

இரண்டாவது உற்பத்தி ஆலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இரண்டாவது உற்பத்தி ஆலைக்கான பணிகளை தொடங்கியுள்ளதாக ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலை தங்கள் நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிப்பதை இலக்காக கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன சந்தை

எலக்ட்ரிக் வாகன சந்தை

எலக்ட்ரிக் வாகன சந்தையின் அற்புதமான வளர்ச்சி கட்டத்தில் லூதியானாவில் எங்களின் புதிய உற்பத்தி வசதியை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன புரட்சியானது இரு சக்கரங்களில் பயணிக்கிறது. இந்த விரிவாக்கம் எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சரியான நேரம்” என்று ஹீரோ எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் முன்ஜால் கூறினார்.

உலகளாவிய சந்தை

உலகளாவிய சந்தை

இந்த புதிய ஆலை இயக்க நிலைக்கு வந்துவிட்டால் உலகளாவிய எங்கள் சந்தை வளரும் என்றும், 2025 ஆம் ஆண்டில் நாங்கள் 1 மில்லியன் வாகன உற்பத்தி திறன்களை அடையும் இலக்கை அடைவதற்கான முயற்சி இது என்றும் முஞ்சால் கூறினார்.

ஒரு மில்லியன் உற்பத்தி திறன்

ஒரு மில்லியன் உற்பத்தி திறன்

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வருடாந்திர உற்பத்தி திறனை ஒரு மில்லியன் யூனிட்டுகளாக உயர்த்துவதாக ஹீரோ நிறுவனம் அறிவித்த சில மாதங்களுக்கு பிறகு இந்த புதிய ஆலைக்கான அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலை புதிய பேட்டரி வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் எதிர்கால தயாரிப்புகளை உருவாக்குவதற்கான மையமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Hero Electric begins work on second manufacturing plant in Punjab

Hero Electric begins work on second manufacturing plant in Punjab | வேற லெவல் திட்டம் போடும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம்… உலகளாவிய சந்தைக்கு இலக்கு!

Story first published: Friday, July 22, 2022, 11:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.