நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது இந்திய பங்கு சந்தையானது சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 6% மேலாக சரிவில் தான் காணப்படுகின்றது.
எனினும் கடந்த 5 நாட்களில் இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளார்கள் மத்தியில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது எனலாம்.
குறிப்பாக கடந்த 5 அமர்வுகளில் மட்டும் 9.76 லட்சம் கோடி ரூபாய் மூதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
ஐடி ஊழியர்களை தக்க வைக்க டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ முக்கிய அறிவிப்பு..!
5 நாளில் நல்ல லாபம்
பிஎஸ்இ சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 2265.8 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த 5 நாள் ஏற்றத்தில் பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பானது 9,76,749.78 கோடி ரூபாய் அதிகரித்து, 2,60,42,730.43 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கடந்த அமர்வில் மட்டும் சென்செக்ஸ் 284.42 புள்ளிகள் அதிகரித்து, 55,681.95 புள்ளிகளாகவும் ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள் மீண்டும் அதிகரிப்பு
ரூபாயின் மதிப்பானது சற்று தடுமாறி வரும் நிலையில், மீண்டும் சந்தையில் அன்னிய முதலீடுகளும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த ஏற்றத்தில் இந்தஸ்இந்த் வங்கி டாப் கெயினராக உள்ளது. அதனை தொடர்ந்து பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, லார்சன் & டூப்ரோ, ஆக்ஸி வங்கி மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
இந்தஸ் இந்த் வங்கி
குறிப்பாக இந்தஸ் இந்த் வங்கி பங்கின் விலையானது 7.88% அதிகரித்துள்ளது. தனியார் வங்கியான இதன் நிகரலாபம் ஜுன் காலாண்டில் 60.5% அதிகரித்துள்ளது.
இதே ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் வங்கி மற்றும் டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போதைய நிலவரம் என்ன?
கடந்த அமர்வோடு தொடர்ச்சியாக இந்திய பங்கு சந்தையானது 5 நாட்களாக ஏற்றத்தில் தான் காணப்பட்டது. 6வது நாளாக இன்றும் பெரியளவில் மாற்றமில்லா விட்டாலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
தற்போது சென்செக்ஸ் 36.94 புள்ளிகள் அதிகரித்து, 55,718.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 17.65 புள்ளிகள் அதிகரித்து, 16,622 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
கவனமுடன் வர்த்தகம் செய்யலாம்
இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்றாலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் போக்கினை பொறுத்தும் மாறுபடலாம். அதோடு ரூபாயின் மதிப்பும் கவனிகக் வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்திலும் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
Investors’ wealth increased by Rs 9.76 lakh crore in last 5 days
Investors’ wealth increased by Rs 9.76 lakh crore in last 5 days/5 நாளில் ரூ.9.76 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!