டெல்லி: டெல்லியில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து ஒன்றிய அரசு விருதுகளை வழங்கிவருகிறது. சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. * திரைப்படங்கள் எடுக்க மிகவும் சாதகமான மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிப்பு * ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு * ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்காக ஸ்ரீகர் பிரசாத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது அறிவிப்பு * சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் சூர்யா மற்றும் அபர்ணா பலமுரளிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு * சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ்குமார்க்கு (சூரரைப்போற்று) அறிவிப்பு * ‘அலா வைகுந்தபுரமுலோ’ தெலுங்கு படத்திற்கு இசையமைத்த தமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிப்பு * சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது சூரரைப்போற்று, மண்டேலா படங்களுக்கு அறிவிப்பு * சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு அறிவிப்பு * Tanhaji: the unsung warrior படத்திற்காக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தேசிய விருது அறிவிப்பு * அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிப்பு * அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிப்பு * அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பெண் பாடகருக்கான விருது அறிவிப்பு * அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக ராஜசேகர், சசி, சுப்ரிம் சுந்தருக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது அறிவிப்பு * சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷ்யாம் (மணிப்புரி) அறிவிப்பு * கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature): Dreaming of woods (மலையாளம்) அறிவிப்பு * சிறந்த சினிமா விமர்சகர் விருது யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.