Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – பெரிய சிக்கலில் இருந்து பெண்ணை காத்த ஆப்பிள் வாட்ச்

Apple Watch saves life: ஆப்பிள் வாட்ச் வழக்கமான ஸ்மார்ட்வாட்சை விட அதிகளவு துல்லிய தன்மை கொண்டதாக விளங்குகிறது. சரியான நேரத்தில் பயனர்களை எச்சரித்து, எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்றிய உயிர் காக்கும் கருவியாக இருந்து வருகிறது.

இம்முறை, புற்றுநோய் கட்டி இருந்த ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை சமிக்ஞை மட்டுமே அனுப்பியுள்ளது. அதாவது, அவரது உடலில் கட்டி இருப்பதால், இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்துள்ளது.

Nothing Phone 1 Sale: ரூ.32,999 மதிப்புள்ள போனை வெறும் ரூ.1,567க்கு வாங்க அருமையான வாய்ப்பு!

அங்குதான் ஆப்பிள் வாட்ச் செயலில் இறங்கியது. சில காலம் முன்பு வரை ஆப்பிள் வாட்ச் தனக்கு இப்படி உதவியாக இருக்கும், தன் உயிரை காக்கும் என்று நினைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவர் அதை உணர்ந்துள்ளார்.

உயிரை காத்த ஆப்பிள் வாட்ச்

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இங்கிலாந்தில் உள்ள மைனே மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மைக்சோமா என்ற அரிதான, வேகமாக வளரும் கட்டி இருந்ததுள்ளது. அது அவரது இதயத்தின் ரத்த விநியோகத்தைத் தடுத்து பக்கவாதத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்துள்ளது.

Prime Day 2022 Tips: என்ன வாங்கினாலும் சரி; இத கொஞ்சம் பாத்துட்டு போங்க!

இந்த நிலையில், செயலில் இறங்கிய அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச், அவரின் இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளது. இது அவரை மருத்துவமைக்கு விரைய உதவியாக இருந்துள்ளது.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation) எனப்படும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பை குறித்து ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் எச்சரித்தபோது, தனது கடிகாரத்தை நம்பவில்லை என்று கிம் துர்கி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

துல்லியமாக கண்டறிந்து எச்சரித்த ஆப்பிள் வாட்ச்

இதுகுறித்து பேசிய அவர், “இதயத்துடிப்பு அதிகரித்தபோதுதான் மருத்துவமனைக்கு செல்ல முடிவுசெய்தேன். ஆனால், அதை நான் நம்பவில்லை. மருத்துவர்கள் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறியிருந்தால், வாட்சை தூக்கி குப்பையில் வீசீயிருப்பேன்”

“நான் நினைத்தது ஒன்று; நடந்தது வேறு. இதயத்துக்குச் செல்லும் ரத்த குழாயில் தசை வளர்ந்திருந்ததால் தான் இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்துள்ளது. இதை தான் ஆப்பிள் வாட்ச் எச்சரித்துள்ளது. தற்போது, இந்த ஸ்மார்ட் சாதனம் என் உயிரையே காப்பாற்றியுள்ளது. நான் இப்போது நலமுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நம்பமுடிகிறதா! உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காத்த iPhone மொபைல்!

ஆப்பிள் 2020ஆம் ஆண்டில் Afib எச்சரிக்கை அமைப்பை தனது ஸ்மார்ட் வாட்சுகளில் அறிமுகம் செய்தது. ECG app1 மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அறிவிப்பு அம்சம், AFib இன் அறிகுறிகளைக் கண்டறிய பயனர்களுக்கு உதவுகிறது.

இந்த எச்சரிக்கைகளை நாம் சரிவர கருத்தில் கொள்ளவில்லை என்றால் பக்கவாதம் ஏற்பட்டு மரணத்தை தழுவ வாய்ப்பிருக்கிறது. இது உலகெங்கிலும் மரணத்திற்கு இரண்டாவது பொதுவான காரணமாகும் என்று ஆப்பிள் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் விவரங்கள்முழு அம்சங்கள்சிறப்புகள்Call Function, Fitness Trackingடிஸைன்Rectangular Dial Designடிஸ்பிளே1.5 Inch (3.81 cm) Displayமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.