iPhone 11 Offers: ஐபோன் என்றாலே பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல தான் இந்த ஸ்மார்ட்போனும் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வேளையில், இன்னும் சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன்களை வெளியிடவுள்ளது. iPhone 14 ஸ்மார்ட்போன்களில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையில், நிறுவனம் தற்போது ஐபோன் 11 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
நம்பமுடிகிறதா! உக்ரைன் ராணுவ வீரரின் உயிரை காத்த iPhone மொபைல்!
ஐபோன் 11 சலுகைகள் (iPhone 11 Offers)
பிளிப்கார்ட்டில் ஐபோன் 11 ஸ்மார்ட்போனை மிகக்குறைந்த விலையில் உங்களால் வாங்க முடியும். அதாவது. 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட ஐபோன் 11 விலை ரூ.49,900 ஆக பிளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இப்போது போனின் விலை ரூ.40,999 ஆகக் குறைந்திருக்கும். இதற்கு பின் தான் பயனர்களுக்கு டாப் கிளாஸ் ஆஃபர் வழங்கப்படுகிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது நல்ல நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20,000 வரை மதிப்பு கிடைக்கும்.
பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் பயன்படுத்தினால் வெறும் ரூ.20,999-க்கு ஐபோன் 11 ஸ்மார்ட்போனை நீங்கள் சொந்தமாக்கலாம்.
Apple Watch: ஒழுங்கற்ற இதயத்துடிப்பு – பெரிய சிக்கலில் இருந்து பெண்ணை காத்த ஆப்பிள் வாட்ச்
ஐபோன் 11 அம்சங்கள் (iPhone 11 Specifications)
ஐபோன் 11 போனில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது 828 x 1792 பிக்சல்கள், 19.5:9 விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த போனில் Apple A13 Bionic (7nm+) புராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் கேமரா, முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பகத்துடன் இந்த போனை வாங்கலாம்.
இந்த போனை சக்தியூட்ட 3110mAh பேட்டரி உள்ளது. இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஐபோன் கருப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, சிவப்பு, வெள்ளை ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த ஐபோன் 11 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.39,999க்கு வாங்கலாம்.