ஃபசல் பீமா யோஜனா திட்டம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!

மத்திய அரசின் முதன்மையான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 40, 000 கோடி ரூபாயை காப்பீட்டு நிறுவனங்கள் வருமானமாக ஈட்டியுள்ளது.

இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக கரீஃப் (கோடை பயிர்கள்) மத்திய அரசு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 2016-17 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 2021-22 வரையில் அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40,000 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறிய 1.56 லட்சம் மக்கள்.. பசி வாட்டுகிறது, பிழைப்புக்காக ‘இதுவும்’ நடக்கிறது..!

நரேந்திர சிங் தோமர்

நரேந்திர சிங் தோமர்

மக்களவையில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பகிர்ந்த தரவுகள் படி இந்த 5 வருட காலகட்டத்தில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வசூலான மொத்த பிரீமியம் தொகை 1,59,132 கோடி ரூபாய். இதில் இழப்பீடாகக் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு 1,19,314 கோடி ரூபாய் உரிமை கோரல்களாகத் திருப்பிச் செலுத்தியுள்ளது.

விவசாயிகள்

விவசாயிகள்

இதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தாலும், தனியார் நிறுவனம் உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இத்திட்டம் லாபகரமாக அமைந்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா
 

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா

இந்தியாவில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா நடைமுறைப்படுத்துவதற்காகப் பதினெட்டுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சில காப்பீட்டு நிறுவனங்கள் வெளிப்படையான ஏல முறை மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

காரீஃ பயிர்கள்

காரீஃ பயிர்கள்

இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து காரீஃப் 2021-22 சீசன் வரை, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரிமைகோரல் அதாவது பாதிப்புக்கு க்ளைம் செய்யப்பட்ட தொகை ஹெக்டேருக்கு ரூ.4,190 வழங்கப்பட்டுள்ளது என விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

அதிக அபாயங்கள்

அதிக அபாயங்கள்

ஏற்கனவே இருந்த பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிக அபாயங்கள் இருந்த நிலையில், விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக்கூடியதாக மாற்றுவதற்கு முந்தைய திட்டங்களைத் திரும்பப் பெற்ற பிறகு, ஏப்ரல் 1, 2016ல் மோடி அரசு பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா தொடங்கப்பட்டது.

ப்ரீமியம்

ப்ரீமியம்

இத்திட்டத்தின் கீழ், அனைத்துக் காரிஃ பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே ப்ரீமியம் தொகையாகவும், அனைத்து ரபி (குளிர்காலத்தில் விதைக்கப்பட்ட) பயிர்களுக்கும் 1. 5% மட்டுமே காப்பீட்டுத் தொகை என்ற ஒரே மாதிரியான அதிகபட்ச பிரீமியம் அளவீடு நடைமுறை செய்யப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Insurance companies made ₹40,000 crore from PM Fasal Bima in 5 years says Narendra Singh Tomar

Insurance companies made ₹40,000 crore from PM Fasal Bima in 5 years says Narendra Singh Tomar ஃபசல் பீமா யோஜனா திட்டம் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம்..!

Story first published: Saturday, July 23, 2022, 14:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.