ஸ்ரீமதி இறுதிச்சடங்கின் போது அவர் தந்தை அழுதபடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் சற்றுமுன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தின் போது மற்றும் ஸ்ரீமதி உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் அவர் தந்தை அழுது கொண்டே பேசினார்.
அவர் கூறுகையில், என் மகளை எதற்காக மண்ணுக்குள் புதைத்தேன் என தெரியவில்லை.
எனக்கு நீதி வேண்டும், அவர்களுக்கு மரண தண்டனை வேண்டும். சிபிசிஐடி சரியாக வழக்கை நடத்தும் என கணிக்கிறேன்.
இதில் சம்மந்தபட்டது பள்ளிக்கூடத்தை சேர்ந்த அந்த 7 பேர் தான். என் மகளை இன்று புதைக்கவில்லை, விதைத்துள்ளேன்.
விதை மரமாக வந்து அவர்கள் குடும்பத்தை வேரறுக்காம விடாது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
என் மகளுக்கு நடந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது.
கொலைகாரனுக்கு மரண தண்டனை கிடைத்தால் தான் மகள் ஆத்மா சாந்தியடையும்.
அந்த கொலைகாரனை நீதிமன்றம் தண்டிக்கவில்லை என்றாலும் என் பொண்ணு தண்டிப்பா என கூறியுள்ளார்.