அவசரகால நிலை கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை

னாதிபதி செயலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போது அவசரகால நிலை சட்டத்தின் கீழ் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,, பொலிஸார் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என தெரிவித்தார்.

நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ், சட்டவிரோதமாக ஒன்றுகூடல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான முறையில் ஒன்றுகூடல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவா கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் நீண்ட காலமாக ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்கும் பிரதான நுழைவாயில் மறிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை

பொது மக்களுக்கான முடிவுகளை எடுப்பதற்கான பிரதான அலுவலக அமைப்பாகக் காணப்படும் ஜனாதிபதி செயலகத்தை நிறைவேற்று ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு .என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.