2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 திகதி வரை இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறவுள்ள “ பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் -2022 ” இல் பெண் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 37 இலங்கை இராணுவ வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
நீச்சல், ஜூடோ, கூடைப்பந்து, கடற்கரை கரப்பந்து, கிரிக்கெட் (பெண்கள்), ரக்பி, குத்துச்சண்டை, தடகளம், பூப்பந்து மற்றும் மற்றுத்திறனாளிகளுக்கான மல்யுத்தம் மற்றும் தட்டெறிதல் ஆகிய போட்டியாளர்களைக் கொண்ட குழு, திங்கட்கிழமை (25) இங்கிலாந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய குத்துச்சண்டை அணியில் இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால், இராணுவத்தின் பங்கேற்பு இந்த முறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
குழுவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் (ஓய்வு) தம்பத் பெர்னாண்டோவும் கேணல் சந்தன தென்னகோன் குழு பாதுகாப்பு இணைப்பாளராக செயற்படுகின்றனர்.
இலங்கை இராணுவம்