புதுடெல்லி: நாட்டில் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் 4 கோடி பேர் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 18 ஆம் தேதி நிலவரம் இது. மக்களவையில் சுகாதார அமைச்சர் பாரதி பிரவீன் பவார் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஜூலை 18 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 1,78,38,52,566 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியுடைய 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை.
முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியானது 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும், சுகாதார முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படுகிறது.
சுதந்திரத்தின் அமுத விழாவை ஒட்டி 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் ஜூலை 15 தொடங்கி 75 நாட்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 98% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.