வெளிநாட்டில் வேலை என்பது பல கோடி பேரின் கனவு, குறிப்பாக எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறிவிடமாட்டோமா என்று தவிக்கும் பல கோடி மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புத் தற்போது பிரிட்டனில் உருவாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் அதிபர் யார் என்ற கேள்விக்கு அந்நாட்டு மக்கள் விடை தேடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விடை கிடைக்கும். இதேவேளையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகச் சந்தை பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வேளையில் இந்திய அரசும், பிரிட்டன் அரசும் முக்கியமான ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியர்களுக்கு இனி பிரிட்டன் நாட்டில் எளிதாக வேலைவாய்ப்பு பெறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
4 வங்கிகளுக்கு கட்டுப்பாடுகள் மட்டும் அபராதம்: ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கை
இந்திய மாணவர்கள்
இந்திய மாணவர்களின் சில இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகள் தற்போது பிரிட்டன் நாட்டின் கல்வித் தகுதிகளுக்கு இணையாக மதிக்கப்படுவதால், பிரிட்டன் நாட்டில் இந்தக் குறிப்பிட்ட பிரிவில் இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தியா – பிரிட்டன்
இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் எப்படி இந்தியன் சீனியர் செகண்டரி ஸ்கூல் / ப்ரீ யூனிவெர்சிட்டி சர்டிபிகேட்-ஐ பிரிட்டன் நாட்டின் பள்ளி உயர் கல்விக்கு இணையாக மதிப்பிடுகிறதோ, அதேவகையில் தற்போது சில பிரிவைச் சேர்ந்த இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளையும் அந்நாட்டுக் கல்விக்கு இணையாக மதிக்கப்பட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பட்ட படிப்புகள்
இன்று முதல், இங்கிலாந்து பட்ட படிப்புகள் இந்தியப் பட்டப்படிப்புக்கு இணையானதாக அங்கீகரிக்கப்படும். இந்தியாவில் பட்டம் பெற்று பிரிட்டன் நாட்டில் வேலைவாய்ப்புக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும் என வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
90% பட்டதாரிகளுக்குப் பலன்
இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை (BA, MA) மற்றும் அறிவியல் (BSc, MSc) பட்ட படிப்புகளும், பட்டங்களும், பிரிட்டனில் சமமாக நடத்தப்படும். இது 90% பட்டதாரிகளுக்கும் பலன் அளிக்கும் மேலும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் படிப்புகளில் இருந்து பெற்ற பட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பிவிஆர் சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார்.
கல்வி, வேலைவாய்ப்பு
இந்தியக் கல்லூரிகளில் ஒன்றில் பட்டம் பெற்ற இந்திய மாணவர் இந்த ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் உயர் படிப்பைத் தொடர தகுதி பெறுவார். இதன் வாயிலாக இந்திய கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் இப்போது இங்கிலாந்து பட்டம் பெற்றவர்களுக்கு இணையாக மதிக்கப்படும் காரணத்தால் இங்கிலாந்தில் வேலை செய்யத் தகுதி பெறுவார்கள்.
பிற பிடிப்புகள்
இதே வேளையில் மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் மருந்தியல் தொடர்பான தொழில்முறை பட்டப்படிப்புகள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாது என வர்த்தகச் செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ப்ரீ டிரேட் ஒப்பந்தம்
இதை இந்தியா – பிரிட்டன் தனது ப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் அங்கீகரிப்பது குறித்து இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார். ப்ரீ டிரேட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 31 வரையில் நடக்கும், தீபாவளிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை
இந்தியா – பிரிட்டன் மத்தியிலான FTA – வின் ஐந்தாவது சுற்றுத் திங்கள்கிழமை துவங்கி ஜூலை 29 வரை நடக்கும், அதன் பிறகு சுற்றுகள் எதுவும் இருக்காது. அதன் பின்பு ப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு ஆகஸ்ட் 31 வரையில் இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் பணிகளை நடந்து, தீபாவளிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்தியாவும் இங்கிலாந்தும் கடல்சார் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் (நர்ஸ்) உள்ளிட்ட கல்வித் தகுதிகளைப் பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இது குறுகிய கால இருதரப்பு இயக்கத்தை மேம்படுத்துவதற்கும், தகுதிகளைப் பரஸ்பரம் அங்கீகரிப்பதை உறுதி செய்வதற்கும் நோக்கமாகச் செய்யப்பட்ட ஒப்பந்தமாகும்.
Now Indian can get job in the UK without any hassle just with an Indian college degree
Now Indian can get job in the UK without any hassle just with an Indian college degree இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. இனி பிரிட்டன் நாட்டில் வேலை வாங்குவது ஈசி.. எப்படித் தெரியுமா..?!