இலங்கையை விட்டு வெளியேறிய 1.56 லட்சம் மக்கள்.. பசி வாட்டுகிறது, பிழைப்புக்காக ‘இதுவும்’ நடக்கிறது..!

மக்கள் போராட்டம், பொருளாதார நெருக்கடி, அரசியல் பிரச்சனைகள், நிதி நெருக்கடி எனப் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதனால் இலங்கையின் வர்த்தகச் சூழ்நிலை விரைவில் மாறும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறினாலும் மக்களுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை மக்கள் முக்கியமான முடிவை எடுத்து வருகின்றனர்.

உள்ளூர் மக்களுக்கு 7,50,000 வேலைவாய்ப்பு: கர்நாடக அமைச்சரவை அதிரடி திட்டம்!

ரணில் விக்கிரமசிங்க

ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றிய உடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க துவங்கியது. இப்படி முழுமையாக இயங்க துவங்கிய அலுவலகத்தில் ஒன்று தான் பாஸ்போர்ட் ஆபீஸ், திறந்த நாளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இலங்கை

இலங்கை

இலங்கையில் வரலாறு காணாத மோசமான வர்த்தகச் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் மக்கள் அந்நாட்டின் மீதும், அரசின் மீதும் நம்பிக்கை இழந்து மக்கள் இலங்கை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். முதலில் போர் காரணமாக இலங்கையில் இருக்கும் மக்கள் வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில் தற்போது அந்நாட்டின் பொருளாதாரச் சரிவின் காரணமாக வெளியேற தயாராகியுள்ளனர்.

பாஸ்போர்ட் அலுவலகம்
 

பாஸ்போர்ட் அலுவலகம்

இலங்கை பாஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் வாங்கவும், பழைய பாஸ்போர்ட்-ஐ ரினிவல் செய்யவும் மக்கள் அலைமோதுகின்றனர். இலங்கை அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 2022ல் மட்டும் 27,900 மக்கள் பிழைப்பு தேடி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் வாயிலாக 9,854 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்புப் பணியகம் (SLBFEP) தெரிவித்துள்ளது. இதேபோல் 2022 ஜனவரியில் இருந்து 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

2022ல் மொத்தம் 1.56 லட்சம்

2022ல் மொத்தம் 1.56 லட்சம்

ஜனவரி முதல் வேலைக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையில் குவைத் முதல் இடத்தில் உள்ளது இந்நாட்டிற்குச் சுமார் 39,216 பேர் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து கத்தார்-க்கு 36,229 பேர், சவுதி அரேபியா-வுக்கு 26,098 பேர், தென் கொரியா-வுக்கு 3,219 பேர், ஜப்பான்-க்கு 2,576 பேர் வேலைக்காக வெளியேறியுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

2.2 கோடி மக்கள்

2.2 கோடி மக்கள்

இலங்கையில் இருக்கும் 2.2 கோடி மக்கள் பொருளாதார நெருக்கடியால், உணவு, மருந்து, எரிபொருள் கூடப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இதற்கிடையில் பள்ளி, கல்லூரி போன்றவை அவ்வப்போது மூடப்படும் காரணத்தால் அந்நாட்டினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.

பசியின் போராட்டம்

பசியின் போராட்டம்

இந்த மோசமான சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்காகப் போராடும் மக்கள் மத்தியில் வேறு வழியில்லாமல் பசியைப் போக்க சில பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டு உள்ள விஷயம் கண்ணீரை வரவழைக்கிறது.

விபசாரம்

விபசாரம்

இலங்கையின் கொழும்பு பண்டராநயகே சர்வதேச விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுவது கடந்த சில அதிகரித்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் போலீசாரின் ஒப்புதலோடும் இது நடக்கிறது எனச் சொல்லப்படுவதுதான் அவலத்தின் உச்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SriLanka crisis: 1.56 Lakh People Have Left country For Jobs to Gulf countries, South Korea and Japan

SriLanka crisis: 1.56 Lakh People Have Left the country For Jobs to Gulf countries, South Korea and Japan | இலங்கை விட்டு வெளியேறிய 1.56 லட்சம் மக்கள்.. பசி வாட்டுகிறது, பிழைப்புக்காக ‘இதுவும்’ நடக்கிறது..!

Story first published: Saturday, July 23, 2022, 13:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.