கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 150-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 270 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷியா போர் தொடுத்தது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவிகள், நிவாரண உதவிகளின் மொத்த மதிப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.
Related Tags :