இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, டெல்லி பேராயர் அதிமதியர் அனில் ஜோசப் தோமஸ் குடோவை 2022 ஜூலை 20ஆந் திகதி அன்று புது டெல்லியில் உள்ள பேராயர் இல்லத்தில் சந்தித்தார்.
உயர்ஸ்தானிகரும் பேராயரும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மிகவும் சுமுகமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர ஊழியர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பல ஆண்டுகளாக பேராயர் குட்டோ, ‘பிரதிக்ஷா’, மேஜர் செமினரிஇ டெல்லி (1991), ‘வினய் குருகுலம்’ மைனர் செமினரியின் ரெக்டர், குர்கான் (1998), ஆயர் விகார் (1999) மற்றும் டெல்லியின் துணை ஆயர் மற்றும் செங்குலியானாவின் பட்டத்து பிஷப் (2001) போன்ற பல முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராயர் குட்டோ செயின்ட் தோமஸ், ரோம், அக்வினாஸ் போன்டிஃபிகல் பல்கலைக்கழகத்தில் (எஞ்சலிகம்) எக்குமெனிகல் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
2012 இல் டெல்லியின் பேராயராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் ஜனவரி 2013 இல் டெல்லியின் பேராயராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
புது டெல்லி
2022 ஜூலை 21