மின்சார வாகனங்களின் இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக E-AMRIT மொபைல் செயலியை நிதி ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது.
E-AMRIT செயலி இந்தியாவின் போக்குவரத்துக்கான துரிதப்படுத்தப்பட்ட இ-மொபிலிட்டி புரட்சியை குறிக்கிறது என நிதி ஆயோக் கூறியுள்ளது.
இந்திய எலக்ட்ரி வாகன சந்தையில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த செயலி நமக்கு வழங்குகிறது.
தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!
நிதி ஆயோக்
பொதுக்கொள்கை சிந்தனை குழுவான நிதி ஆயோக், மின்சார வாகனங்களின் இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த E-AMRIT என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, இந்தியாவில் மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரி மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி சந்தை குறித்த அறிக்கையையும் நிறுவனம் வெளியிட்டது.
E-AMRIT செயலி
E-AMRIT செயலி என்பது இந்தியாவின் போக்குவரத்துக்கான துரிதப்படுத்தப்பட்ட இ-மொபிலிட்டி புரட்சியை குறிக்கிறது என்றும், இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பலன்களை அணுகுவது உள்பட பல முக்கிய தகவல்களை பயனர்களுக்கு இந்த செயலி வழங்குகிறது.
என்னென்ன தகவல்கள்
E-AMRIT மொபைல் செயலி என்பது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இணைய போர்ட்டலான e-Amrit என்பதின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இந்த இணையத்தளமானது மின் வாகனங்களை ஏற்றுக்கொள்வது, அவற்றின் கொள்முதல், முதலீட்டு வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் மானியங்கள் போன்றவற்றை பற்றிய தகவல்களை வழங்குகிறது.
இந்தியர்களின் விருப்பம்
இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையாகும். இந்தியர்கள் ஜீரோ எமிஷன் வாகனங்களுக்கு (ZEVs) மாற விரும்புகின்றனர். தொழில்நுட்ப செலவுகள் குறைவு, சுவாசிக்கும் காற்று தூய்மையாகும் நிலை ஆகியவை காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
அறிக்கை
இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘E-AMRIT செயலியானது, மின்சார வாகனங்களின் நன்மைகளை மதிப்பிடுவதற்கும், சேமிப்பை தீர்மானிப்பதற்கும், இந்திய மின்சார வாகன சந்தை மற்றும் தொழில்துறையின் முன்னேற்றங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் அவர்களின் விரல் நுனியில் பெறுவதற்கு உதவும். மேலும் மின்சார வாகனங்கள், அதற்கு உதவும் கருவிகள் போன்ற முக்கிய தகவல்களை பயனர்களுக்கு இந்த செயலி வழங்குகிறது. ஆண்ட்ராய்டு பதிப்பில் கூகுள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும் இந்த மொபைல் செயலியை மின்சார வாகனங்கள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவரும் டவுன்லோடு செய்து வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி
2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி “பஞ்சாமிர்த்” என்ற உறுதிமொழியை அளித்தார். இதில் 500GW புதைபடிவமற்ற மின்சார திறனை அடைவது உட்பட பல விஷயங்கள் அடங்கும். 2030ஆம் ஆண்டுக்குள் 45 சதவிகிதம் புகை உமிழ்வை குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும், இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
Niti Aayog launches new app E-Amrit to raise awareness
Niti Aayog launches new app E-Amrit to raise awareness | எலக்ட்ரி வாகனங்கள் குறித்த சந்தேகமா? இந்த ஒரு செயலி இருந்தால் போதும்!