எலான் மஸ்க் விரைவில் செவ்வாய் கிரகத்தில் நகரத்தை அமைக்க இருப்பதாக கூறியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் டீசலை டோர் டெலிவரி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனமொன்று எலான் மஸ்க் செவ்வாய் கிரகம் சென்றாலும் அங்கு அவருக்கு டீசலை டோர் டெலிவரி செய்ய தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
ரத்தன் டாடாவின் உதவியால் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து தற்போது பார்ப்போம்.
தூத்துக்குடி-க்கு ஜாக்பாட்.. ரூ.7,164 கோடி திட்டம் விரைவில்.. சுவிஸ், UAE என 6 நிறுவனங்கள் போட்டி..!
ஸ்டார்ட் அப் நிறுவனம்
புனேவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 100 லிட்டருக்கு குறைவில்லாமல் ஆர்டர் செய்யும் நிறுவனங்களுக்கு டீசலை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குகிறது. மேலும் செயலி மூலம் ஆர்டர் செய்யலாம் என்ற வசதியையும் செய்து கொடுத்துள்ளது. இதுவரை $7.5 மில்லியன் நிதியை பெற்ற இந்நிறுவனம் கூடுதலாக சுமார் $37.5 மில்லியன் திரட்ட திட்டமிட்டுள்ளது.
15 நாள் கடன்
25 வயதான அதிதி போசலே வாலுஞ்ச் மற்றும் அவரது கணவர் சேத்தன் வாலுஞ்ச் ஆகியோர் புனேவில் உள்ள பெட்ரோல் பம்பில் தங்கள் குடும்ப தொழிலை செய்து கொண்டிருந்தபோது, கடனில் டீசல் வாங்கி 15 நாள் சுழற்சியில் பணம் செலுத்தும் சிறு வணிக நிறுவனங்களுக்கு 15 நாள் கடனில் டீசல் சப்ளை செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
திடீர் யோசனை
2016ஆம் ஆண்டு அதிதி போசலே ஒரு இ-காமர்ஸ் இணையதளத்தில் ஒரு புத்தகத்தை ஆர்டர் செய்தார். அந்த புத்தகம் அடுத்த நாளே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது. அப்போதுதான் அவருக்கு வாடிக்கையாளருக்கு டீசலை ஏன் டெலிவரி செய்ய முடியாது என்ற திடீர் யோசனை தோன்றியது.
ரத்தன் டாடாவுடன் சந்திப்பு
இந்த யோசனை தோன்றிய சில மாதங்களுக்கு பிறகு, ரத்தன் டாடாவை அதிதி போசலே தனது கணவருடன் சந்தித்து இந்த யோசனையை அவர் முன்வைத்தபோது அவரது ஆசீர்வாதங்களும் கிடைத்தது. அதன் பிறகு இதற்கு தேவையான உரிமங்களைப் பெற டெல்லி சென்று அனைத்து பணிகளையும் விறுவிறுப்பாக முடித்தனர்.
ஆப் மூலம் ஆர்டர்
இந்தியாவில் பெரும்பகுதி வணிகம் கடனில் இயங்குவதால் சிறிய மற்றும் நடுத்தர நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 100 லிட்டர் ஆர்டரில் டீசலை கடனுக்கு வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பித்த இந்த தம்பதி, டீசலை டெலிவரி செய்ய வாகனங்களையும் வடிவமைத்துள்ளனர். மேலும் செயலி மூலம் ஆர்டர் பெற்று அந்த ஆர்டரை குறிப்பிட்ட தேதியில் டெலிவரியும் செய்துள்ளனர்.
ரூ.63 கோடி வருவாய்
இந்த தம்பதியின் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 60-70 கிலோ லிட்டர் டீசலை விற்பனை செய்து இந்த ஆண்டு ரூ.63 கோடி வருவாயை ஈட்டியுள்ளனர். மேலும் இன்னும் அதிக முதலீடுகளை திரட்டி மேலும் வருவாயை அதிகப்படுத்தும் திட்டமும் இந்த தம்பதியிடம் உள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விரும்பினாலும், அங்கேயும் அவருக்கு டீசலை வழங்குவோம்” என்று நம்பிக்கையாக அதிதி கூறுகிறார். அவரது நம்பிக்கையே அவரது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
If Musk goes to Mars, we’ll deliver diesel there too says startup founder
If Musk goes to Mars, we’ll deliver diesel there too says startup founder | எலான் மஸ்க் செவ்வாய் கிரகம் சென்றாலும் அங்கே அவருக்கு டீசல் சப்ளை செய்வோம்.. சொன்னது யார் தெரியுமா?