கச்சா எண்ணெய் – ஜியோ எதில் அதிக லாபம்? . ரிலையன்ஸ் காலாண்டு அறிக்கை குறித்த ஒரு பார்வை!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை வந்துள்ள நிலையில் அந்நிறுவனம் 46% அதிக வருமானத்தை பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இதுவரை பெற்றுள்ள காலாண்டு வருமானத்தில் இந்த காலாண்டில் தான் மிக அதிக வருமானத்தை ரிலையன்ஸ் மூலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை மூலம் எந்த நிறுவனத்தின் மூலம் அதிக லாபம் அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.

4000 கோடி ரூபாய் கடன் வாங்கி சென்னை நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? 4 பேர் கைது!

46% லாபம் அதிகரிப்பு

46% லாபம் அதிகரிப்பு

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் காலாண்டு அறிக்கையில் அதன் சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகளின் வலுவான செயல்பாட்டின் காரணமாக அதன் நிகர லாபத்தில் 46% வருடாந்திர அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் அதன் தொலைத்தொடர்பு வணிகமான ஜியோ 5% தொடர்ச்சியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ரூ.1,61,715 கோடி வருவாய்

ரூ.1,61,715 கோடி வருவாய்

ரிலையன்ஸின் O2C வணிகமானது அதன் வலுவான காலாண்டில் ரூ.1,61,715 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, இது RIL இன் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 72% ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த மூன்று மாதங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈட்டிய ஒவ்வொரு ரூ.10க்கும் O2C வணிகம் ரூ.7 பங்களித்தது.

ரஷ்யா மீதான ஐரோப்பிய தடை
 

ரஷ்யா மீதான ஐரோப்பிய தடை

ரிலையன்ஸ் அதன் வலுவான செயல்திறனுக்காக ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றிய தடையை பயன்படுத்தி கொண்டது. ரஷ்ய எண்ணெய் தயாரிப்புகள் மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை காரணமாக அதிக கொள்முதல் மற்றும் சலுகை விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதன் காரணமாக எரிபொருள் சந்தைகள் மற்றும் மேம்பட்ட தயாரிப்பு விளிம்புகளை விளைவித்துள்ளதாகவும், இறுக்கமான கச்சா எண்ணெய் சந்தைகள், அதிக ஆற்றல் மற்றும் சரக்கு செலவுகள் மூலம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டாலும், O2C வணிகம் அதன் சிறந்த செயல்திறனை வழங்கியுள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் எம்டி முகேஷ் அம்பானி கூறினார்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் லாபம்

ரிலையன்ஸ் ரீடெய்ல் லாபம்

இருப்பினும் வீழ்ச்சியடைந்த ரூபாய் மற்றும் உயரும் வட்டி விகிதங்கள் அதன் நிதி செலவுகளை ஆண்டுக்கு ஆண்டு 17.7% அதிகரித்துள்ளன என்று ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில்லறை வணிகம் பணவீக்கத்தை முறியடிப்பதால் லாபம் குறைகிறது என்றும், இந்த காலாண்டிலும் ரிலையன்ஸ் ரீடெய்ல் மீண்டும் ரூ.58,000 கோடியை கடந்தது என்றும் தெரிகிறது.

ஜியோ லாபம்

ஜியோ லாபம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மார்ச் காலாண்டிற்கு பிறகு அதன் நிகர லாபத்தில் 5% தொடர்ச்சியான அதிகரிப்பை பதிவு செய்தது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் நெட்வொர்க்கில் 10 மில்லியன் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance reports a 46% increase in profit in Q1 FY23. All-time high revenue growth!

Reliance reports a 46% increase in profit in Q1 FY23. All-time high revenue growth! | அடேயப்பா இம்புட்டு லாபமா? ரிலையன்ஸ் முதல் காலாண்டு அறிக்கையில் ஆச்சரியம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.