குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு உடன் ஈபிஎஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போதைய இந்திய குடியரடிசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. எனவே அவருக்கு இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்வதற்காக தற்போதைய அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
மேலும், அவர் புதிய குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள திரௌபதி முர்முவை டெல்லியில் இன்று எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.