குட்கா ஊழல் : முன்னாள் டி.ஜி.பி-கள், மாஜி அமைச்சர்கள் மீது வழக்கு நடத்த தமிழக அரசு அனுமதி

குட்கா ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் எஸ்.ஜார்ஜ், டி.கே. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவர் நடத்தி வந்த குட்கா மற்றுமு் பான் மசாலா தயாரிப்பு குடோன் மற்றும், சென்னை அண்ணா நகரில் உள்ள குடோன் மேலாளர் ராஜேந்திரன் என்பவரது வீடு ஆகிய இரண்டு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.

இந்த ஆவணங்களில் சென்னை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் பலரும் குட்கா விவகாரத்தில் கோடி கணக்கில் லஞ்சம் பெற்றதாக தகவல்கள் இருந்தது. மேலும் அப்போது அமைச்சராக இருந்த பி. வெங்கட்ரமணா என்கிற ரமணா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி மாநில அரசுக்கு சிபிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு (III), புது தில்லி, வணிக வரித்துறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், அப்போதைய உணவுபாதுகாப்புத்துறை நியமன அதிகாரி, லட்சுமி நாராயணன்,  திருவள்ளூர் கும்முடிப்போண்டி தொகுதி அப்போதைய உணவு பாதுகாப்பு அதிகாரி பி.முருகன், அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், தி.க. ராஜேந்திரன், சென்னை புழல் ரேஞ்ச் காவல் உதவி ஆணையராக இருந்த ஆர்.மன்னார் மன்னன், செங்குன்றம் காவல் கண்காணிப்பாளராக இருந்த வி.சம்பத், சென்னை மாநகராட்சியின் அப்போதைய கவுன்சிலர்/ஹெல்த் கமிட்டியின் தலைவர் ஏ.பழனி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை விடுத்திருந்தது. .

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா சப்ளையர்களிடமிருந்து லஞ்சம் பெற்றது குறித்து விசாரணை நிறுவனம் அதன் அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அவரது கருத்தை கேட்ட மாநில அரசு வழக்கறிஞர்,. பி.வி. ரமணா சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று கூறினார், அப்போதுதான் இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற  தகவல்கள் மூலம் முதன்மையான வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர  ஊழல் தடுப்புச் சட்டம், 1988ன் கீழ் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசு, சார்பில் ரமணா விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து சிபிஐ அலுலகத்திற்கு தலைமை செயல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.