ஆடி மாத அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்த நிலையில் ஆடி மாத அமாவாசை திருவிழாவை முன்னிட்டு ஜூலை 25ம் முதல் ஜூலை 29ம் தேதி வரை 5 நாட்கள் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், காலை 5 மணி மதியம் 3 மணி வரை மட்டுமே மலையேற்றத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 5 நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் பயண அனுமதி தடை செய்யப்படும். இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.